66வது இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (11.09.2023) தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் 9 காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 33 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பாக 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது.

மேற்படி நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் அவர்கள் ரோந்து மேற்கொண்டு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான சூரங்குடி மற்றும் சென்னமரெட்டிபட்டி சோதனை சாவடிகள் உட்பட பல பகுதிகளுக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், புதூர் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன், சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.