தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் உடற்பயிற்சி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மைதானத்தில் வைத்து இன்று (04.11.2023) காலை நடைபெற்றது.மேற்படி உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, தூத்துக்குடி உட்கோட்ட காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அய்யப்பன், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிமாறன், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில்குமார், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மாரியம்மாள் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.