விருதுநகர் மாவட்டம் இன்று 12.08.2024ம் தேதி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக D.கண்ணன், அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும் எனவும், குற்றங்கள் குறைக்கப்படும் எனவும், அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களின் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் காவல் ஆளினர்கள் தங்களது காவல் பணியில் மிக கண்ணியத்துடன் நடந்து கொள்வது அவசியம் என்றும், காவல் நிலையங்களில் பதிவாகும் கொலை, கொள்ளை, திருட்டு, போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளில் தனி கவனம் செலுத்தியும், வழக்குகள் மீது உடனடியாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், உரிமம் இல்லாமல் கள்ளத்தனமாக பட்டாசு தயார் செய்பவர்களை கண்டறிய தனிக்குழு அமைத்தும், வெடி விபத்துக்கள் ஏற்படா வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும், சமூகத்தில் குற்றங்களில் எண்ணிக்கையை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணப்பாளர்களை அறிவுறுத்தினார்.
Related Posts
ஆதரவற்ற முதியவர் சடலத்தை கண்ணியத்துடன் அடக்கம் செய்த கம்பம் தெற்கு சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ்ராஜா
September 19, 2023
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பளார் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் புதிய பாதை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
September 29, 2023