கலசலிங்கம் பல்கலையில் “சர்வதேச இணைய வழி பாதுகாப்பு நாள்” விழா!
“இணைய வழி பயன்பாட்டில் கவனக் குறைவு பண இழப்புக்கு காரணம்”
இணைய வழி குற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் மாணவர்களுக்கு அறிவுரை!
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில், “சர்வதேச இணைய வழி பாதுகாப்பு நாள்” விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம், வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.
இந்த விழாவில், வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் மாணவர்களுக்கு உரையாற்றி, “மாணவர்கள் எப்பொழுதும் இணைய வழி குற்றங்களை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 1930 என்ற எண் தொலைபேசிக்கு அழைத்து உடனடியாக புகார் செய்ய வேண்டும். இதனை உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்” எனக் கூறினார்.


துணைத்தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த், மாணவர்களுக்கு இணைய வழி தொடர்புகளில் பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, மாவட்ட கண்காணிப்பாளர் டி. கண்ணன், விழாவில் உரையாற்றி, “இருசக்கர வாகனப் பயணத்தில் ஹெல்மெட் அணிதல், போதைப் பொருட்களை ஒழித்தல், மற்றும் சைபர் கிரைமில் ஏமாற்றாமல் இருத்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். இணைய வழியில் கவனக்குறைவால் பண இழப்புகள் ஏற்படுகின்றனர்.” என்றார்.
இதனை தொடர்ந்து, பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே. அசோகன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றின.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் என். மீனா வரவேற்புரை மற்றும் நன்றி கூறினார்.
இந்த விழாவில் 1000 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.