தமிழக காவல்துறையில் 38 வருடங்கள் அமைச்சுப் பணியாளராக இருந்து சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் நல்லையா அவர்கள் மற்றும் 35 வருடங்கள் பணி புரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் துப்புரவு பணியாளராக இருந்து ஓய்வு பெறும் முத்துலட்சுமி அவர்கள் ஆகிய மூவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் அவர்கள் பொன்னாடை அணிவித்தும், பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.