விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சுலோச்சனா தெருவில் திரு.மகேஸ்வரன் மற்றும் குருசரண்யா ஆகிய வசித்து தம்பதியினரின் புதல்வரான அதியன் பார்த்தசாரதி என்ற 10 மாத குழந்தை கடந்த 07.08.2023ம் தேதி 2 மாடி கட்டத்தில் உள்ள 34 படிகளை 4 நிமிடம் 20 நொடிகளில் ஏறி சாதனை புரிந்துள்ளார். இந்த சாதனையை அங்கீகரித்து 18.08.2023ம் தேதி Noble World Records சான்றிதழ் வழங்கியுள்ளது. மேற்படி சாதனையை அறிந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்ரீனிவாசகப் பெருமாள் M.A, M.B.A., அவர்கள் சாதனை புரிந்த மேற்படி குழந்தை மற்றும் அவரது பெற்றோர்களை நேரில் வெகுவாக பாராட்டி சிறப்பித்தார்.
சாதனை புரிந்த பத்து மாத குழந்தையை பாராட்டிய விருதுநகர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர்
