திருநெல்வேலி மாவட்டம், தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழநத்தம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மரங்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட 2 நபர்கள் தாலுகா காவல்துறையினருடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து போட் (Boat) மூலமாக மீட்டுள்ளனர். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்கள் நேரில் சென்று மீட்கப்பட்ட 2 நபர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.