திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் அவர்கள், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு (Tamil Nadu State Disaster Response Force – SDRF) அணியை எப்போதும் செயல்படத் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களை வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சேதங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் தயார் நிலையில் உள்ள SDRF அணிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.
பயிற்சி பெற்ற காவலர்கள்
இக்குழுவில், நீச்சல் மற்றும் வெள்ளநிவாரண பணிகளில் நிபுணத்துவம் பெற்ற காவலர்கள் இடம் பெற்றுள்ளனர். மழைகாலங்களில் அபாயகரமான நிலைகளில் இருந்து பொதுமக்களை மீட்கவும், அவசர அவசர உதவிகளை விரைந்து வழங்கவும் இத்திட்டமானது வலுப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்
மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகளை காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்துள்ளார்:
- மின்சார உபகரணங்களை கவனமாக கையாளவும்.
- வெள்ளம் நிரம்பிய ஆறு, குளம் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
- வெளியே செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்கவும்.
இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், காவல்துறையின் செயலில் மக்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கின்றன.