திருப்பூரில் மோசடி: சொத்து வாங்கிக் கொண்டு பணம் வழங்காமலே , ஏமாற்றிய ரவிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈஸ்வரமூர்த்தி என்பவர் காவல்துறையில் புகார் .
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், ஆலாம்பாடி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, தனது சொத்துக்களை தனது நீண்ட கால நண்பரான ரவிராஜ் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். அதன்படி, 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி, காங்கேயம் சார் பதிவாளர் அலுவலகத்தில், காங்கேயம், ஆலாம்பாடி கிராமத்தில் உள்ள வரதப்பகவுண்டன் புதூரில் உள்ள பட்டா எண்.288, க.ச.454/10C மற்றும் க.ச. 454/13 நெ. ஆகிய இரண்டு காலைகளில் பு.ஹெக்.1.36.50 (பு.ஏ.3.37) அவரின் சொத்துக்களைக் குறித்து ஒரு கிரையப் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கிரையத் தொகை ரூ. 2.5 கோடி என்று உடன்படிக்கையிலிருந்து ஒப்புதல் பெற்றிருந்தாலும், ரவிராஜ் அவ்வப்போது தொகையை வழங்குவதாக உறுதியளித்தும், பணம் கொடுக்காமல் பல மாதங்கள் தாமதம் ஏற்படுத்தியுள்ளார். மேலும், அவர், கிரையப் பணம் கொடுக்காமலேயே, சொத்துக்கள் குறித்து கலர் நகல்களை பயன்படுத்தி பைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற முயற்சியுடன், மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில், மேலும், சொத்தின் உரிமையாளர் கிரையப் பணம் கேட்டபோது, அவரை கடுமையாக மிரட்டல்களை உண்டாக்கி உள்ளார்.
முன்னதாக அவர் சொன்னபடி, கிரையப் பத்திரம் பதிவு செய்யப்பட்ட பின்பு, எவ்வித தொகையும் செலுத்தாமல், சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்படுகிறார். இது தவிர,ஈஸ்வரமூர்த்தியின் குடும்பத்தினருக்கு,கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த புகார் குறித்து ஈஸ்வரமூர்த்தியிடம் நாம் கேட்ட போது நிலத்திற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கும் போது வெறும் நகல்களை வைத்து என்னுடையை சொத்தை வேறு நபருக்கு விற்க போவதாகவும் நம்மிடம் கூறினார். இது குறித்து காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் ஓரிரு நாளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.சார்பதிவாளர் அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு கொடுத்து தடங்கல் மனு ஒன்றும் கொடுக்கப்பட்டு அதன் நகல்,மாவட்ட பதிவாளர்,பத்திரப்பதிவு IG, Dig என அனைவருக்கும் அனுப்பி இருக்கிறோம் என்றார் ஈஸ்வரமூர்த்தி
இந்த சொத்தை பதிவு செய்யும் போது எவ்வித பணப்பரிவர்த்தனையும் நடை பெறாமல் பதிவு செய்ததே சட்டப்படி குற்றமாகும்.
ஒரு சொத்தை பதிவு செய்ய கண்டிப்பாக ஒரிஜினல் பத்திரம் தேவைப்படும் போது அது இல்லாமல் தொத்தை பதிவு செய்ய காவல்துறையிடம் இருந்து ஒரிஜினல் பத்திரம் தொலைந்தது என FIR பெற்ற பின் உரிய விசாரணை செய்து நான் டிரேசபில் சர்டிபிகேட் வாங்கி அதன் ஒரிஜினல் ஆராய்ந்த பின்பே சொத்தை பதிவு செய்ய முடியும், இந்த நடைமுறைக்கு ஆறு மாத காலம் அவகாசம் ஆகும் இது இல்லாமல் பதிவு செய்து பத்திரத்தை பெண்டிங் கூட வைக்க முடியாது இப்படி செய்யும் பட்சத்தில் பதிவு செய்து கொடுக்கும் சார்பதிவாளர் கண்டிப்பாக சட்டத்தின் பிடியில் மாட்டுவார். குற்றத்தில் உடந்தையாக செயல்பட்ட அரசு அதிகாரிகளும் இடம் பெறுவது உறுதி.
