தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்களின் 50வது பொன்விழா ஆண்டினை தமிழ் நாடு காவல் துறை கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் காவலர் மட்டும் பங்குபெறும் சென்னை பழவேற்காடு- கோடியக்கரை சென்று திரும்பும் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவு பாய் மரப்படகு பயணம் கடந்த 10.06.2023 அன்று மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பயணமானது இன்று 17.06.2023 மாலை சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இந்த நிகழ்வானது இந்தியாவின் ஒலிம்பிக் படகோட்டம் சங்கத்துடன் இணைந்திருக்கும் யாட்ச் அசோசியேஸ்சன் ஆப் அங்கீகரிக்கப்பட்டுள்ளது இந்தியா லண்டன் மூலம் உலக அதிகாரப்பூர்வமாக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக நிறைவு விழா இன்று 17.06.2023 மாலை 04.00 மணியளவில் சென்னை துறைமுகத்தில் உள்ள ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளாப் தளத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தளபதி முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாய்மரப்படகு பயணத்தில் கலந்து கொண்ட பெண் காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

இவ்விழாவில் முனைவர் சந்தீப் மித்தல், இ.கா.ப., கூடுதல் காவல்துறை இயக்குநர் கடலோர பாதுகாப்பு குழுமம், .B.பாலநாகாதேவி, இ.கா.ப.. கூடுதல் காவல்துறை இயக்குநர், நிர்வாகம், . K.பவானீஸ்வரி, இ.கா.ப.. காவல்துறை தலைவர் மற்றும் இணை இயக்குநர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, .A.கயல்விழி,இ.கா.ப., கடலோரபாதுகாப்பு குழுமம், .N.S.நிஷா, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், மயிலாடுதுறை மாவட்ட மற்றும் .P.சுந்தரவடிவேல், காவல் கண்காணிப்பாளர், கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியோர் பங்கேற்றனர்.

Jpr ( Editor ) ,Chennai