தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் திரு.திவான்மைதின், திரு.வினோத்ராஜா ஆகியோர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையின் போது நான்கு சக்கர வாகனத்தில் 1.சுகப்பிரியா, 2.முத்துசெல்வம், 3.சந்தோஷ், 4.சுவாதி, 5.ஈஸ்வரி, 6.செல்லகாளி, 7.ஜெயக்குமார், ஆகிய 7 நபர்கள் 180 கிலோ கஞ்சா கடத்தி வந்ததையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து 7 நபர்களை கைது செய்து கம்பம் வடக்கு காவல் நிலைய குற்ற எண் 733/2020 பிரிவு 8(C)r/w 20(b),(II)(C)&29(1)&25 NDPS Act &269 IPC r/w 3 of The Epidemic Diseases Act 1897 & 51(b) of The Disaster Management Act 2020-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று 14.02.2024-ம் தேதியன்று மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தின் இறுதி விசாரணையின் முடிவில் மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.A.S.ஹரிஹரகுமார்,B.L., அவர்களால் ஏழு நபர்களும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 7 நபர்களுக்கும் தல 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1,00,000/- ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டணையும் விதித்து தீர்ப்பளித்தார்.

காவல் ஆய்வாளர் சிலைமணி

இவ்வழக்கில் திறம்பட வாதுரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.A.சுரேந்திரன்,Bsc,B.L., அவர்களையும், இவ்வழக்கில் கஞ்சாவை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து வழக்கினை தேனி மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு மாற்றம் செய்த கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினருக்கும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.R.சிவபிரசாத்,இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். தென் மண்டலம் முழுவதும் கஞ்சா ஒழிப்பை திறம்பட கட்டுப்படுத்திய முன்னாள் தென் மண்ட காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க் .இ.கா.ப., தலைமையில் முன்னாள் தேனி காவல் கண்காணிப்பாளர் தற்போதைய மதுரை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே இ.பா.க.,தென் மண்டல முழுவதும் கஞ்சா ஒழிப்பு மற்றும் தடுப்பை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தற்போதைய தமிழக முதல்வரின் திருக்கரங்களால் 2023-ம் ஆண்டு சிறந்த காவல் கண்காணிப்பாளர் காண விருது மற்றும் பதக்கங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது .தேனி மாவட்டத்தில் ஓடைப்பட்டி காவல் நிலைய எல்லைப் பகுதியில் கஞ்சா விற்பனையாளர்களின் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது தமிழக வரலாற்றில் பேசு பொருளானது.. தற்போது
மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வழக்கு 14.02.2024 தற்போது தமிழக முழுவதும் காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது