தொலைந்த அல்லது திருடு போன செல்போன்களைக் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாத ஒரு பொருளாகவே மாற்றிவிட்டது. அதிக விலையிலான ஸ்மார்ட்போன்களை வாங்கி பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி அதிக விலை கொடுத்து வாங்கும் ஸ்மார்ட்போன்கள் தொலைந்து விட்டாலோ அல்லது திருடுபோனாலோ இனி பதற்றம் அடைய வேண்டாம். ‘சஞ்சார் சாத்தி’ (SANCHAR SAATHI) என்று பெயரிடப்பட்டுள்ள தொழில்நுட்ப போர்டலின் மூலம் செல்போனின் IMEI நம்பரைப் பயன்படுத்தித் தொலைந்துபோன அந்த ஸ்மார்ட்போனை இந்தியாவின் எந்த மூலையிலிருந்தாலும் கண்டுபிடித்து விடலாம்.
இந்த போர்டலுக்குள் சென்று போன் நம்பர், மொபைலின் IMEI நம்பர், போன் மாடல் காணாமல் போன பகுதி, குறித்த விவரம், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் புகார் எண் மற்றும் அதன் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பி ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளீடு செய்து சமர்ப்பித்தால் ஸ்மார்ட்போன் எங்கிருந்தாலும் அதை ப்ளாக் செய்வதோடு மட்டுமல்லாமல், எங்கு உள்ளது என்பதையும் கண்டறிய முடியும்.
மேலும் காவல் உதவி எண் 100-ஐ தொடர்பு கொண்டு காணாமல் அல்லது திருட்டுப் போன Mobile Phone-ன் IMEI-ஐ நம்பரை தெரியப்படுத்தி புகார் பதிவு செய்யலாம் அல்லது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.