திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் BETI BACHAO BETI PADHAO (BBBP) திட்டத்தின் கீழ் 80 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி – சான்றிதழ்கள் மற்றும் YELLOW BELT வழங்கல்
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் முன்னெடுப்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” எனும் Beti Bachao Beti Padhao (BBBP) திட்டத்தின் கீழ் 80 பள்ளி மாணவிகளுக்கு கடந்த 45 நாட்களாக கராத்தே தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முடிவடைந்ததை அடுத்து, (19.03.2025) வாணியம்பாடி காந்திநகர் அரசு மாதிரிப் பள்ளியில் சான்றிதழ்கள் மற்றும் YELLOW BELT பட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஷ்ரேயா குப்தா, இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) தலைமையில் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் YELLOW BELT பட்டங்கள் வழங்கப்பட்டன.
அதன்பின், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, தற்காப்பு திறன்கள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் (IUCAW) திரு. பாலகிருஷ்ணன், ஆய்வாளர் திருமதி. அன்பரசி (IUCAW), பள்ளி மேலாண்மை குழுத் தலைவி சீதாலட்சுமி வடிவேல், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.