வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்களின் உத்திரவின் பேரில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 21.10.2024-ம் தேதி பேர்ணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தமிழக ஆந்திர எல்லை சோதனை சாவடியான, பத்தரப்பல்லி சோதனை சாவடியில், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவை சார்ந்த பெண் தலைமை காவலர்- 2333 கவிதா, மற்றும் பேர்ணாம்பட்டு காவல் நிலைய முதல்நிலை காவலர்- 2700 தினகரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி வந்த, TN 23 DW 0850 என்ற பதிவெண் கொண்ட, இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 90ML அளவு கொண்ட (XXX RUM) 20 மதுபாக்கெட்டுகள் மற்றும் 180 ML அளவு கொண்ட (Original Choice Wiskey) 30 மதுபாக்கெட்டுகள் என மொத்தம் 50 மதுபாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்து, எதிரிகள் 1.விஜய், வ/26, த/பெ. கதிரவன், மொரசபல்லி, பேர்ணாம்பட்டு, 2.சதிஸ்குமார், வ/24, த/பெ. வேலு, மொரசபல்லி, பேர்ணாம்பட்டு ஆகியோரை பேர்ணாம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் அவர்களிடம் ஒப்புவித்து எதிரிகள் மீது பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேலும், சோதனை சாவடியில் துரித நடவடிக்கை மேற்கொண்டு, வெளிமாநில மதுபாக்கெட்டுகள் கடத்துபவர்களை தடுத்த, குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவை சார்ந்த பெண் தலைமை காவலர்- 2333 கவிதா மற்றும் பேர்ணாம்பட்டு காவல் நிலைய முதல்நிலை காவலர்- 2700 தினகரன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று (22.10.2024) தேதி நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
- News
- Crime
- Events
-
Featured
-
Featured
-
Featured
-
- Silent Siren
- Videos
- Transfer
-
Featured
-
Featured
-
Featured
-
- Subscription
- Register
- Log In
Select Page