விழுப்புரம் மாவட்டம், காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக புற நோயாளிகள் மருத்துவமனை இன்று (03.03.2025) திறக்கப்பட்டது.
இந்த மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஞானவேல் மற்றும் ஆய்வாளர் அருணாச்சலம் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது.
காலை 9:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இயங்கும் இந்த மருத்துவமனையில், அரசு மருத்துவர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் பணியாற்ற உள்ளனர். காவல்துறையினரின் உடல்நலம் முக்கியம் என்பதால், அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த புதிய மருத்துவ சேவையின் மூலம் காவலர்கள் உடல் நல பராமரிப்பில் மேலும் கவனம் செலுத்த முடியும் என்பதால், காவல்துறையினர் இது குறித்து உற்சாகம் தெரிவித்துள்ளனர்.