திருவிடைமருதூர் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கும், பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இன்று உலக போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 25க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றன.
இதில் நாள் முழுவதும் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற சுமார் 200 மாணவ மாணவிகளை திருவிடைமருதூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

மேலும் போதை பொருள் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சுமார் 2,000 மேற்பட்டோர் ஒரே நாளில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக திருவிடைமருதூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் முகாம் அலுவலகத்தில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது நூலகம் திறக்கப்பட்டது.