திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக 2 கிலோ கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்த தலைமைக் காவலர் ஏ. எபின் ஏஞ்சல் மற்றும் முதல்நிலைக் காவலர்கள் செ. சுதாகர், கு.க. கார்த்தீசன் ஆகியோரின் சிறப்பான காவல் பணியை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று (12.08.2026), திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள், காவலர்களை சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களின் பணியை டிஐஜி அவர்கள் பாராட்டினார்.