திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு 26.06.2024 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு விழிப்புணர்வு பேரணி பழைய ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை நடைபெற்றது.இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்,IAS., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 1700 பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர்.மேலும் இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட கல்வி ஆய்வாளர் தன்ராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குணசுந்தரி, திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்,தனிப்பிரிவு ஆய்வாளர் ரஜினி குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் , பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடல்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு இறுதியில் போதைப் பொருள் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.