மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது கடந்த 01.03.2021-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. சிவபிரசாத், I.P.S., அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் சம்பந்தமான புகார்களில் கடந்த இரு மாதங்களில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் ரூ. 13,81,750/- (பதிமூன்று லட்சத்து எண்பத்தொராயிரத்து எழுநூற்றி ஐம்பது) மதிப்புள்ள 80 மொபைல்கள் சுண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் 05.08.2023- ந் தேதி உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ. 1,58,42,400/- ( ஒரு கோடியே ஐம்பத்தெட்டு லட்சத்து நாற்பத்திரெண்டாயிரத்து நானூறு) மதிப்புள்ள 1107 மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொது மக்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் கடந்த இரு மாதத்தில் ரூ.2,82,406/- (இரண்டு லட்சத்து எண்பத்திரெண்டாயிரத்து நானூற்றி ஆறு) இதுவரை ரூ.44,28,805/- ( நாற்பத்தி நான்கு லட்சத்து இருபத்திரெண்டாயிரத்து எண்ணூற்றி ஐந்து) உரியவர்களுக்கு அவர்களுடைய வங்கிக்கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கி கணக்கு எண், CVV மற்றும் OTP போன்ற விபரங்களை முன் பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும். மேலும் பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் Investment App- களை நம்பியும், ஆன்லைன் வேலை வாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மற்றும் குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் Online Loan App – கனிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம் என்றும், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் Video Call- ஐ Attend செய்ய வேண்டாம், வங்கி கணக்கு விபரங்களை Update செய்யுமாறு வரும் link – குகளை Click செய்ய வேண்டாம் என்றும், Remote Access App களான Anydesk, Team Viewer போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், யாரேனும் மேற்கூறிய வகையில் பணம் இழக்க நேர்ந்தால் Cyber Crime Help line No. 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். தெரியப்படுத்தியுள்ளார்,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. சிவபிரசாத், I.P.S.,