வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் “இமைகள்” திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கௌதமன் அவர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோரின் தலைமையிலான போலீசார் இன்று (07.09.2023) ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவியர்களுக்கு பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து அறிவுரை வழங்கப்பட்டு Kaaval Uhavi App, Child Helpline Number 1098 மற்றும் Women Helpline Number 181 ஆகிய உதவி எண்கள் பற்றி விளக்கி அதன் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாவட்டம் முழவதும் உள்ள பள்ளி/கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கு மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.