சென்னை பெருநகரில், விவிஐபிக்கள் வழி பாதுகாப்பு பணி, திறந்தவெளி பொது இடங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், கட்சி கூட்டங்கள்,அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு பணி உட்பட, வெளியிடங்களில் நடைபெறும்
உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணியிலிருக்கும் ஆண் மற்றும் பெண் காவலர்கள், இயற்கை உபாதைகளை கழிக்க குறிப்பாக பெண் காவலர்கள் சிரமப்படுவதால், சென்னை பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டில் 10 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் இயங்கி வருகின்றன. சென்னை பெருநகரில் பாதுகாப்பு பணிகள் நடைபெறும் இடங்களுக்கு, நடமாடும் கழிப்பறை வாகனங்கள் அனுப்பப்பட்டு காவல் ஆளிநர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல்துறையின் 4 மண்டலங்களுக்கும் தலா 2 கழிப்பறை வாகனங்கள் என 8 கழிப்பறை வாகனங்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு 2 கழிப்பறை வாகனங்கள் என 10 நடமாடும் கழிப்பறை வாகனங்களும் தினசரி பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கழிப்பறை வாகனங்களிலும் 2 இந்தியன் வகை கழிப்பறை, 2 மேற்கத்திய கழிப்பறைகள் என 4 கழிப்பறைகளும், உடை மாற்றுவதற்கு 1 சிறிய அறை, கை கழுவுவதற்கு 2 வாஷ் பேஷின்கள், தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள 1 தண்ணீர் தொட்டி, பெண் காவலர்கள் கழிப்பறை வாகனங்களில், 5 ரூபாய் நாணயம் செலுத்தினால் நாப்கின்கள் வழங்கும் Coin insert vendor machine, சிறிய குப்பை தொட்டி ஆகியவை பொருத்தப்பட்டு. நல்லமுறையில் இயங்கி வருகிறது. இதில் பெண் காவலர்களுக்கான 3 கழிப்பறை வாகனங்களை 3 பெண் காவலர்கள் ஓட்டி வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 10 நடமாடும் கழிப்பறை வாகனங்களும் சுத்தமாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணமும் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு. தினசரி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, காவல் ஆளிநர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு கழிப்பறை வாகனம் தினசரி தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டு. அங்கு பணிபுரியும் பெண் காவல் ஆளிநர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.