வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள், வேலூர் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மற்றும் சி.எம்.சி கண் மருத்துவமனையுடன் இணைந்து மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு இன்று 23.09.2023 காலை சுமார் 09.30 மணியளவில் காவலர் திருமண மண்டபத்தில் கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இம்முகாமில் கண்புரை, குழந்தைகளின் கண் நோய், கண்நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளை எழுத்து பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களால் அவதிப்பட்டு வரும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் சுமார் 180 நபர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
Related Posts
சென்னை பெருநகர காவல் துறையின் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்
August 23, 2023
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கி.பிரபாகர் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் இன்று பாய்ஸ் கிளப்பில் நடைபெற்றது
September 6, 2023