வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதியில் கடந்த மாதம் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ் அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு மாணவியர்களிடம் குறைகள் மற்றும் தேவைகளைப் பற்றி கேட்டு அறியப்பட்டது, இதன் தொடர்பாக இன்று 25.09.2023-ம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் ரோட்டரிகிளப்புடன் இணைந்து மாணவிகளின் பயன்பாட்டிற்காக 12 மின்விசிறிகள், 10 Tube Lights மற்றும் RO Water Purifier-களை நேரில் சென்று வழங்கினார்கள் உடன் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.