ராஜபாளையம் போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் போக்குவரத்து காவல்துறையினர் அரசு பள்ளி மற்றும் பொது இடங்களில் போக்குவரத்து விதிமீறல் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தது
அரசு எஸ் எஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது மேலும் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணியாமல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் படுகாயம் ஏற்பட்டு தவறு செய்தவர்கள் மட்டுமல்லாது அவர் தம் குடும்பத்தையும் எப்படி பாதிக்கிறது என்பதை விளக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிகளில் டிஎஸ்பி பழனிக்குமார் (பொறுப்பு) போக்குவரத்து காவல் ஆய்வாளர் லாவண்யா சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பரமசிவம் மாரியப்பன் மற்றும் போக்குவரத்து காவல்துறயினர் மாணவர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Site Icon