மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று (30.10.2023) விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம் மற்றும் சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மேற்படி காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விஜயலெட்சுமி, உதவி ஆய்வாளர் முருகன், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமி, சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.