வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பவர்கள், விற்பவர்கள், பயன்படுத்துபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் . N.மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் இன்று 07.11.2023-ம் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் திரு .மணிகண்டன் ஆகியோர்களின் தலைமையிலான போலீசார் காட்பாடி இரயில் நிலையம் அருகே நடத்திய சோதனையில் ஒடிசாவிலிருந்து கேரளா எர்ணாகுலம் செல்லும் இரயிலில் வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கார்திகேஷ்வர் பாண்டா த/பெ ரவீந்ரநாத் பாண்டா என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி கொண்டு வந்த 1,10,000 ரூபாய் மதிப்புடைய சுமார் 11 கிலோ எடைகொண்ட கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்து எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்தார்.
- News
- Crime
- Events
-
Featured
-
Featured
-
Featured
-
- Silent Siren
- Videos
- Transfer
-
Featured
-
Featured
-
Featured
-
- Subscription
- Register
- Log In
Select Page