18.11.2023-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். M.S.முத்துசாமி IPS., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட்ஜான்.,IPS, அவர்களின் முன்னிலையில் நீதிமன்ற காவலர்கள் மற்றும் நிலைய வரவேற்பாளர்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் நீதிமன்ற காவலர்கள் குற்ற வழக்குகளை நீதிமன்றத்தில் கையாளுவதில் பின்பற்றப்படும் தற்போதைய நடைமுறைகளைப் பற்றி கேட்டு அறிந்தார். பிறகு எவ்வாறு கையாளுவது வழக்குகளை துரிதமாக முடிப்பது மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், திரு. முத்துமாணிக்கம், திரு.புஷ்பராஜ் அவர்கள் தனிப்பிரிவு ஆய்வாளர் திரு. ரஜினிகுமார் தனி பிரிவு உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய நீதிமன்ற காவலர்கள் காவல் நிலைய வரவேற்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .