ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று 20.12.2023 பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் 23வது வாரம் தொடர்ந்து நடைபெற்றது. இக்குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் ஆணையளார் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றார். இக்குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் ஆணையரக அனைத்து காவல் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். முதல்வரின் முகவரியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தீர்வு காணப்படாத 50 மனுக்கள் மற்றும் நிலுவையில் இருந்த 80 மனுக்கள் உரிய அதிகாரிகள் மூலம் விசாரித்து தீர்வு காணப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 37 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் விசாரித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related Posts
திருநெல்வேலி மாவட்டத்தில்சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
August 8, 2024
புதுக்கோட்டை டவுன் டி. எஸ். பி ராகவி நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்
October 10, 2023