சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், கண்காணிப்பாளராக (அமைச்சுப்பணியாளர்) பணிபுரிந்து வந்த திரு,பி.ஜலால் போஸ் அவர்கள் உடல் நலக்குறைவால் 21.01.2023 அன்று இறந்தார். இறந்துபோன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் ரூ.5,00,000/- நிதி திரட்டினர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், .கா.. அவர்கள் (22.12.2023) காவல் ஆணையரகத்தில், இறந்துபோன கண்காணிப்பாளர் தெய்வத்திரு.ஜலால் போஸ் அவர்களின் மனைவி திருமதி.A.மேபல் அவர்களிடம் மேற்படி ரூ.5,00,000/- பணத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.க.சென்னகேசவன், மாநில பொதுச் செயலாளர் திரு.பெ.சத்தியேந்திரன், மாநில துணைத்தலைவர் திரு.ஜெ.சுப்புராயலு, மாநில நிர்வாகிகள் மற்றும் சென்னை பெருநகர அலுவலக கிளை சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்