சந்தீப் ராய் ரத்தோர், .கா.., காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் அவர்கள், இன்று (26.12.2023), மதியம், வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட (TNPBF) சிறப்பு மருத்துவ சிகிச்சை தொகை மொத்தம் ரூ.68,80,201/-, ஒதுக்கீடு பெற்ற 39 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களூக்கு நேரில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) A. கயல்விழி, இ.கா.ப., காவல் துணை ஆணையாளர்கள் V.R.சீனிவாசன் (நிர்வாகம்), முனைவர்A.மணிவண்ணன், (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.