வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிறிஸ்டியான் பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாநில காவல்துறை சோதனை சாவடி ஆனது புதுப்பிக்கப்பட்டு இன்று 30.12.2023-ம் தேதி வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். M.S. முத்துசாமி இ.கா.ப., அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடி ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதியில் முக்கியமான சோதனை சாவடியாகும், இச்சோதனைச் சாவடி வழியாக அரசால் தடை செய்யப்பட்ட (குட்கா, கஞ்சா மற்றும் கள்ளச்சாரயம்) போன்ற போதைப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் நவீன CCTV Camera உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் N. மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- News
- Crime
- Events
-
Featured
-
Featured
-
Featured
-
- Silent Siren
- Videos
- Transfer
-
Featured
-
Featured
-
Featured
-
- Subscription
- Register
- Log In
Select Page