இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் என். கண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில் திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப மற்றம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகளின் நிலை குறித்தும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள எதிரிகளை கைது செய்வது குறித்தும், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைiயில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு வழக்குகளின் நிலை குறித்து ஆலோசனை செய்து அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. இராஜாமணி, முதல் நிலைக் காவலர் திரு. முரளீதரன் மற்றும் தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. முருகேசன் ஆகியோரை பாராட்டி தென் மண்டல் காவல்துறை தலைவர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இக்கூடத்தில் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. வாக்கரே அக்ஷய் அணில் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் மணியாச்சி திரு. லோகேஸ்வரன், திருச்செந்தூர். திரு. வசந்தராஜ், கோவில்பட்டி திரு. வெங்கடேஷ், ஸ்ரீவைகுண்டம் திரு. மாயவன், சாத்தான்குளம் திரு. அருள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு திரு. சிவசுப்பு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. ஜெயராஜ், மாவட்ட குற்றப்பிரிவு திரு. சந்திரதாசன், விளாத்திக்குளம் திரு. ராமகிருஷ்ணன், ஆயுதப்படை திரு. புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.