வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் கஞ்சா, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் இன்று

வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு .முரளிதரன் அவர்களின் தலைமையிலான போலீசார் திருமணி மெயின் ரோடு பகுதியில் சோதனை மேற்கொண்டு சுமார் 07 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரி பொன்னுரங்கம் வ/43 த/பெ வேலு காட்பாடி, என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு .முரளிதரன் அவர்களின் தலைமையிலான போலீசார் ஏரிபுதூர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டு சுமார் 20 லிட்டர் கள்ளசாராயம் கொட்டி அழிக்கப்பட்டது. காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் திரு.தமிழ்செல்வன் அவர்களின் தலைமையிலான போலீசார் திருவலம் மேட்டுப்பாளையம் மதுபான கடை அருகே சோதனை மேற்கொண்டதில் சுமார் 402 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் பிரகாஷ் வ/31 த/பெ ஆறுமுகம் வேலூர் மற்றும் விஜயகுமார் வ/42 த/பெ லோகு பெருமுகை என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 39 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மீது 10 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது