கோவை மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (25.03.2024) சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுள்ள தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதுப்பாளையம் பிரிவு வரை மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் என சுமார் 200 நபர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இக்கொடி அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Posts
கோயம்பேடு காவல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது
June 18, 2023
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய காவல் – ரோந்து” திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
March 14, 2024