திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்களின் நேரடி கண்காணிப்பில் ஏர்வாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏர்வாடி, பொத்தையடி போன்ற முக்கிய பகுதிகள் வழியாக ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படை உதவி ஆய்வாளர் திரு. ராம்கிஷன் அவர்கள் உட்பட ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படை வீரர்கள் 40 பேர் மற்றும் ஏர்வாடி உதவி ஆய்வாளர் திரு. சாம்ஜி அவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.

அதேபோல், வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.கே.புரம் மற்றும் காக்கநல்லூர் போன்ற முக்கிய பகுதிகள் வழியாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் 58 பேர் மற்றும் வி.கே.புரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த் அவர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.