சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் உடல்நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கான தொகையினை தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து (TNPBF) பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர் என மொத்தம் 16 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து (Tamilnadu Police Benevolent Fund – TNPBF) மொத்தம் ரூ.30,77,494/-  ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், .கா.., அவர்கள், இன்று (23.04.2024) காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்படி சிறப்பு மருத்துவ சிகிச்சை தொகை ஒதுக்கீடு பெற்ற 16 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை உதவி தொகை  ரூ.30,77,494 /- வழங்கினார்.

 மேலும்  காவல் ஆணையாளர் அவர்கள், 2023ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்  குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கல்வி பரிசுத் தொகை ரூ.75,000/-ஐ 12 காவல் துறையினரின் குழுந்தைகளுக்கு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்  திரு.கபில் குமார் சி சரத்கர், இ.கா.ப (தலைமையிடம்) காவல் துணை ஆணையாளர்கள் திரு.K.அதிவீரபாண்டியன் (நிர்வாகம்), திரு.D.ரமேஷ்பாபு, (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை) பொறுப்பு தலைமையிடம், காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.