தேனி மாவட்ட காவல் துறையில் பணியாற்றிய T கள்ளிபட்டியைச் சேர்ந்த 1993 பேட்ஜ் தலைமை காவலர் காமராஜ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். உயிரிழந்த காமராஜ் அவர்களுக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளனர் .அவர்களின் குடும்ப நலனுக்காக உதவிக் கரம் நீட்டிய 1993 ஆம் ஆண்டு பேட்ஜ் காவல் துறையினர் சார்பாக ரூபாய் 6,82,600 பணத்தை வசூல் செய்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் IPS ., திருகரங்களால் வழங்கினார்.இந்நிகழ்வில் தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமார் மற்றும்1993 ஆம் ஆண்டு பேட்ஜ் காவலர் முத்துராமலிங்கம் தமிழரசன் , சத்தியமூர்த்தி , ராதாகிருஷ்ணன்,முருகேசன், கோபால் ,சுதாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.இந்நிகழ்வில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையில் உள்ள காவலர்கள் தனது உடல் நலத்தை சிறப்பாக பேணி காத்து தனது குடும்பத்தில் உள்ள அனைவரின் நலனுக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்.