திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் சீல் உடைக்கப்பட்ட நிலையில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக பல்லடம் காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் நேற்று காலை காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வெட்டுப்பட்டான் குட்டை பொது கழிப்பிடம் அருகே வைத்து சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து விசாரணைக்காக பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் மற்றும் அபிமன்யு ஆகிய இருவரும் அரசு மதுபான கடைகள் திறப்பதற்கு முன்னதாக சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்த நிலையில் அவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Posts
தென்மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் என். கண்ணன் இ.கா.ப. தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை.
February 14, 2024