பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக 80 பழங்குடி சிறுமியர்களுக்கு 30 நாட்கள் தற்காப்பு பயிற்சியான கராத்தே, சிலம்பம் மற்றும் திறன் மேம்பாடு முகாம் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் சண்முகம் அவர்களின் உத்தரவின்படியும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் சாம்ராஜதுரை அவர்களின் அறிவுரைப்படி “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் ‘ஒரிக்கை மற்றும் ஏகனாம்பேட்டை” அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயிலும் பழங்குடி இனத்தை சார்ந்த சேர்ந்த 80 பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியான கராத்தே, சிலம்பம் மற்றும் திறன்மேம்பாடு பயிற்சி 10.07.2024-ம் தேதி முதல் 10.08.2024ம் தேதி வரை 30 நாட்கள் அளிக்க இன்று 10.07.2024-ம் தேதி சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் பிரபாவதி, சோமசுந்தரம், சுப்பிரமணி, சிறுவர் உதவி மைய உறுப்பினர் அமுதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள்சுசிலா, உதயகுமார் தினகரன், ஏகனாம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுகுணாதேவி மற்றும் ஒரிக்கை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர் தமிழரசி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி முகாமில் தற்காப்பு பயிற்சி மட்டுமின்றி பெண்குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து வீடியோ படத்தொகுப்பினை ஒளிபரப்பி பழங்குடியினர் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.