தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பணியின் போது பாத்ரூமில் மயங்கி விழுந்து தலையில் பலத்த காயமுற்ற போலீஸ்காரர் பாலமுருகன் 35, சிகிச்சை செலவிற்கு ஆர்.டி.ஓ., . முத்துமாதவன் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் தென்கரை ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். ஜூன் 4ல் டூவீலரில் ரோந்து பணியின் போது பெரியகுளம் போலீஸ் குடியிருப்பில் உள்ள பாத்ரூமிற்கு சென்றார் அங்கு அவருக்கு லைட்டை ஆண் பண்ணுவதற்காக ஸ்விட்ச் பாக்ஸை தொட்ட போது மின் அழுத்தம் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினர், போலீஸ் நண்பர்கள் உதவியுடன் இதுவரை ரூபாய்.21 லட்சம் சிகிச்சைக்கு செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்து மாதவன் சொந்த பணம் ரூபாய்.3 லட்சத்தை பாலமுருகன் சிகிச்சைக்காக குடும்பத்தினரிடம் வழங்கினார். தற்போது பாலமுருகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த 2010 பேட்ஜ் போலீசார் விருமாண்டி, லட்சுமணன், ஆகாச காளை, விஜயலட்சுமி, பாரதி ஆகியோர் ஆர்.டி.ஓ., முத்து மாதவன் அவர்களுக்கு 09.08.2024 மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். ஏற்கனவே முத்து மாதவன் அவர்கள் காவல் துணை கண்காணிப்பாளராகசிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும் பின்னர் குரூப் I தேர்வின் மூலம் ஆர்.டி.ஓ வாக தேர்வாகி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சிறப்பான மக்கள் பணியினை மேற்கொண்டு வருகின்றார்.
- News
- Crime
- Events
-
Featured
-
Featured
-
Featured
-
- Silent Siren
- Videos
- Transfer
-
Featured
-
Featured
-
Featured
-
- Subscription
- Register
- Log In
Select Page