திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழகுடோன் பகுதியில் உறவினர் யாருமின்றி வசித்து வரும் 75 வயது உள்ள முதியோர் லட்சுமி என்பவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், திருப்பூர் மாநகர ஆணையாளரால் அறிமுகப்படுத்தப் பட்ட DEDICATED BEAT நம்பர் 13 யின் 8925961502 என்ற எண்ணுக்கு போன் செய்து தனக்கு மாத்திரை வாங்க வசதி இல்லை என்று கூறி அதனால் மாத்திரை வாங்கித் தந்து உதவுமாறு கேட்டுள்ளார். அப்போது பீட் பணியில் இருந்த காவலர் முதல்நிலை காவலர்.கருப்பையா உடனடியாக சென்று அவருக்கு 15 நாட்களுக்கு தேவையான மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு நமது காவலர் கருப்பையா என்பவர் மேற்படி மூதாட்டியை சந்தித்து அவருக்கு உணவு கொடுத்துவிட்டு பீட் தொலைபேசி எண் கொடுத்து வந்துள்ளார். இந்த செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.லட்சுமி ஐபிஎஸ் வெகுவாக பாராட்டினார்.
Related Posts
ஓடும் ரயில்லில் கொள்ளை அடித்த 6 பீகார் மாநில இளைஞர்கள் திருப்பூர் இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
July 2, 2024
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இ.கா.ப., சென்னை நொளம்பூர் காவல் நிலையத்தில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்…
January 7, 2023