திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் M.மனோகர் இ.கா.ப அவர்கள் (08.11.2024) -ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள, தனிப்பிரிவு அலுவலகம், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம், மாவட்ட குற்ற பிரிவு, குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு, ஆகிய பிரிவுகளை பார்வையிட்டும், பதிவேடுகளை சரிபார்த்தும் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆய்வின் போது அந்தந்த பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களுக்கு பணியை மேம்படுத்தும் சில அறிவுறைகளை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் T.மதியழகன் (தலைமையிடம்), M.பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) ஆகியோர்கள் உடனிருந்தனர்.
Related Posts
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் விசாரணை
December 20, 2023