டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற 73வது அகில இந்திய காவல் துறையினருக்கான தடகள போட்டியில் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த காவலர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி பல்வேறு இடங்களைப் பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் 1623 சி. சுந்தர் அவர்கள், Triple Jump போட்டியில் 7-வது இடத்தைப் பெற்றார். இவரது முந்தைய சாதனைகள் குறிப்பிடத்தக்கவை: 2018ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கத்தையும் ₹3 லட்சம் ரொக்கப் பரிசையும் வென்றுள்ளார். 2019ஆம் ஆண்டிலும் வெண்கலப் பதக்கத்தை வென்று கவனம் ஈர்த்தார்.
திருச்சி மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் 1583 ச. அரவிந்த், 110 மீட்டர் தடைகள் ஓட்டத்தில் 5-வது இடத்தைப் பெற்றார்.
அரியலூர் மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் 1389 குழந்தைவேலு, குண்டு எறிதலில் 12-வது இடத்தையும், திருச்சி மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் 2888 தர்ஷன், ஈட்டி எறிதல் போட்டியில் 17-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்த சாதனைகளை அங்கீகரித்து, மத்திய மண்டல காவல்துறை தலைவர் க. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் வெற்றி பெற்ற காவலர்களை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த வெற்றிகள் மத்திய மண்டல காவல்துறையின் திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.