ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2023- 24 ஆண்டுகளில் நடைபெற்ற 28 குற்ற வழக்கு சம்பவங்களில் மீட்கப்பட்ட தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் மற்றும் கைபேசிகள் ஆகியவை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று 15.05.2024 ஆவடி காவல் ஆணையரங்கம் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் ஆவடி காவல் ஆணையாளர்.கி.சங்கர். இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு மேற்படி மீட்கப்பட்ட சொத்துக்களான சுமார் 185 கிராம் தங்க நகைகள், சுமார் 5 கிலோ வெள்ளி பொருட்கள், பணம் சுமார் ரூ.4,67,500/- மற்றும் 398 கைபேசிகளை உரியவர்களிடம் வழங்கினார்.