இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள Indian Penal Code, Criminal Procedure Code மற்றும் Indian Evidence Act ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக Bharatiya Nyaya Sanhita – 2023 (BNS), Bharatiya Nagarik Suraksha Sanhita – 2023 (BNSS) and Bharatiya Sakshya Adhiniyam – 2023 (BSA) வரப்பட்டுள்ளது. மேற்படி சட்டங்கள் எதிர்வரும் 01.07.2024ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ள வேண்டி இன்று 13.04.2024ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களால், மேற்படி பயிற்சி வகுப்புகள் துவங்கி வைக்கப்பட்டது. மேற்படி பயிற்சி வகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சூர்யமூர்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அசோகன் மற்றும் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேற்படி பயிற்சி வகுப்பிற்கு ஆசிரியராக மதுரை சட்ட கல்லூரி உதவி பேராசியர் திருமதி.சோனா, திருமதி.தமிழ்செல்வி மற்றும் ஏற்கனவே பயிற்சி பெற்ற காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர்கள் ஆவார்கள். இப்பயிற்சி வகுப்பு 13.05.2024ம் தேதி முதல் 17.05.2024ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன் பிறகு அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு உட்கோட்ட வாரியாக துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 7 கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related Posts
கன்னியாகுமரி மாவட்டத்தில் “போலீஸ் அக்கா” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள்
November 20, 2024