கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 122/26 (பிரிவுகள் 127(2), 103(1), 305 BNS) சார்ந்த ஆதாயக் கொலை வழக்கில், காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

இவ்வழக்கை விரைவாக கண்டறிவதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவ இடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல்வேறு CCTV கேமிரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மற்றும் சந்தேகநபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, இந்த வழக்கில் தொடர்புடைய பார்த்தீபன், பாண்டீஸ்வரன், வனிதா, கொம்பையா மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து, வழக்கின் விவரங்களை கேட்டறிந்து, அவர்களின் சிறப்பான பணிக்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.