ராஜபாளையம் புதிய டிஎஸ்பியாக அழகேசன் அவர்கள் பொறுப்பு ஏற்றபின் செய்தியாளர்களை சந்தித்தார்.உற்சாகமாக பேசிய டி.எஸ்.பி.,ராஜபாளையம் சப்டிவிஷனில்
குழந்தைகள் கடத்துவதாக வருகின்ற வதந்திகளை நம்ப வேண்டாம் சந்தேகத்தின் பேரில் வடமாநில தொழிலாளர்களை தாக்குவதுசட்டப்படிகுற்றம்,மீறி தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
மேலும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை முற்றிலும் ஒழிக்கப்படும்.சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறேன். விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி அமைதியான முறையில் தேர்தல் நடக்க ராஜபாளையம் சப்டிவிஷனில் எல்லாவிதமான முன் ஏற்பாடுகள் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறோம். அனைத்து விசயங்களிலும் கால நேரம் பாராமல் அயராது உழைப்போம்
பொதுமக்கள் எந்த நேரத்திலும் காவல் துறையை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என்று டி.எஸ்.பி.,அழகேசன் தெரிவித்தார்.