திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தனி விரல் ரேகைப் பிரிவில், இன்று (17.08.2026) காலை திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, தனி விரல் ரேகைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பதிவேடுகள் மற்றும் ஆய்வுக் குறிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பிரிவில் பணிபுரியும் காவல் அலுவலர்களுக்கு பணிகள் தொடர்பாக தேவையான அறிவுரைகளையும் வழங்கினார்.