கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் வெளியே செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக 07.05.2024-ம் தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவில் உள்ள சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் பந்தல் அமைத்து கொடுத்துள்ளார்கள்.

  இதனால் மக்கள் சிக்னலில் நிற்கும்போது சிறிது நேரம் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். இதனால் பெரம்பலூர் மாவட்ட வாகன ஓட்டிகள் பெருமகிழச்சி அடைவதாக மாவட்ட காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.